Screen Reader Access     A-AA+
அருள்மிகு நடராஜர் திருக்கோயில், பாரிமுனை, சென்னை - 600001, சென்னை .
Arulmigu Natarajar Temple, Parrys, Chennai - 600001, Chennai District [TM000254]
×
Temple History

தல வரலாறு

வட சிதம்பரம் என அழைக்கப்படும் இத்திருக்கோயில் கிழக்கிந்திய கம்பெனியில் தங்கக் காசுகள் சரிபார்ப்பு அதிகாரியாகப் பணியாற்றிய பக்தர் ஒருவரால், 1776ம் ஆண்டு கட்டப்பட்டதாகும், சென்னையில் வடக்கு கடற்கரையில் மேற்கு நோக்கி எழுப்பப்பட்ட முதல் திருக்கோயில் என்ற பெருமை இவ்வாலயத்திற்கு உண்டு. இவ்வாலயத்தில் உள்ளே நுழைந்ததும் இடப்பக்கம் நடராஜர் சபை, ஆடல் வல்லான், அம்பாள் சிவகாம சுந்தரி, விநாயர் சுப்ரமணியர் ஆகியோர் உற்சவ மேனியராய் அருள் பாலிக்கின்றனர். அடுத்து தில்லை விநாயகர் சன்னதி, தனிச் சன்னதியாக அமைந்துள்ளது. மூலஸ்தானத்திற்கு மேல் இரண்டு நிலை ருத்ரகோடி விமானம் அமைந்துள்ளது. மூலவர் சன்னதிக்கு அருகே தெற்கு நோக்கி சன்னதியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஜொலிக்கும் அம்பாள் சிவகாம சுந்தரி அருள் பாலிக்கிறார்.