அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில், Perambur - 622203, புதுக்கோட்டை .
Arulmigu Veeramakaliamman Temple, Perambur - 622203, Pudukkottai District [TM025429]
×
Temple History
தல வரலாறு
பல வருடங்களுக்கு முன் செம்முனி என்ற மனித இரத்தம் குடிக்கும் கொடுமையான காளி தெய்வம் வசித்து வந்தது. அது பெரம்பூர் வோளளர் தெருவில் உள்ள குழந்தைகளை வீட்டுக்கு ஒருவர் வீதம் வருடத்திற்கு ஒரு குழந்தையைக் காவு வாங்கிக் கொண்டு இருந்தது. அதனால் மக்கள் மிகவும் கவலையுடன் இருந்தனர்.
ஒரு பிள்ளையைப் பெற்றத் தாய் ஒருத்தி கணவனை இழந்து, தன் குழந்தையை நம்பி வாழ்ந்து வந்தாள். செம்முனிக்கு அந்த வருடம் அக்குழந்தையைப் பலிகொடுக்கும் முறை வந்தது. அந்தத் தாய் தன் ஒரு குழந்தையைக் காப்பாற்ற வழி தெரியாமல் மனம் நொந்து பெரம்பூரில் உள்ள வாட்டாருடைய ஐயனார், வளர்த்தாரப்பன் கோயிலுக்கு வந்து...பல வருடங்களுக்கு முன் செம்முனி என்ற மனித இரத்தம் குடிக்கும் கொடுமையான காளி தெய்வம் வசித்து வந்தது. அது பெரம்பூர் வோளளர் தெருவில் உள்ள குழந்தைகளை வீட்டுக்கு ஒருவர் வீதம் வருடத்திற்கு ஒரு குழந்தையைக் காவு வாங்கிக் கொண்டு இருந்தது. அதனால் மக்கள் மிகவும் கவலையுடன் இருந்தனர்.
ஒரு பிள்ளையைப் பெற்றத் தாய் ஒருத்தி கணவனை இழந்து, தன் குழந்தையை நம்பி வாழ்ந்து வந்தாள். செம்முனிக்கு அந்த வருடம் அக்குழந்தையைப் பலிகொடுக்கும் முறை வந்தது. அந்தத் தாய் தன் ஒரு குழந்தையைக் காப்பாற்ற வழி தெரியாமல் மனம் நொந்து பெரம்பூரில் உள்ள வாட்டாருடைய ஐயனார், வளர்த்தாரப்பன் கோயிலுக்கு வந்து என் குழந்தையைக் காப்பாற்றுங்கள் என்று முறையிட்டு அழுதாள். அந்தத் தெய்வங்கள் அந்தத் தாயின் நிலைக்கு மனமிரங்கி அம்மா எங்களால் இந்தக் காளியை அடக்க முடியாது. வீரப்பூருக்குச் சென்று வீரமலையில் தவம் செய்து கொண்டிருக்கும் வீரமகாமுனியைக் கண்டு முறையிட்டு அழுதால் உன் குறை தீரும் என்று கூறினார்.
அந்தத் தாய் உடனே வீரப்பூர் சென்று வீரமகாமுனியிடம் தன் குறையைச் சொல்லி அழுதாள். அதற்குள் குழந்தையைக் காவு வாங்கும் நாள் வந்து விட்டது. செம்முனி குழந்தையைத் தேடிச் சென்றது. குழந்தை அழியப் போவதை அறிந்த வீரமகாமுனி விஸ்வரூபம் எடுத்து வீரப்பூர் மலையில் ஒரு காலும், பெரம்பூரில் உள்ள செம்முனியின் தலையில் ஒரு காலும் வைத்தார். செம்முனி பூமிக்குள் அழுந்திவிட்டது. குழந்தை காப்பாற்றப்பட்டது.
பெரம்பூர் மக்கள் மனம் மகிழ்ந்து வீரமகாமுனியைத் தங்கள் ஊரிலேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உடனே வீரமகாமுனி வருடத்திற்கு ஆறு மரக்கால் நெல்லும் ஒரு ஆட்டுக்கிடா எனக்குக் காவு வேண்டும் என்றும், வெள்ளி, திங்கள் கிழமைகளில் எனக்கு உதிர சோறு படைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. அது தவிர என்னால் பூமிக்குள் போன முனிக்கு வருடம் ஒருமுறை இந்த நாளில் வேளாள சிறுவன் ஒருவனின் தொடையைக் கிழித்து உதிரச் சோறு படைக்க வேண்டும் என்றும் வாரம் இருமுறை கெடா வெட்டு செய்து படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.
பெரம்பூர் மக்கள் வீரமகாமுனியின் கட்டளைப்படி செய்வதாக ஒப்புக்கொண்டனர். வீரமகாமுனி தன்னுடன் வீரமலையில் தவம் செய்த தன் தங்கை வீரமாகாளியை அழைத்து வந்து செம்முனி அழிந்த இடத்தில் நிறுத்தி அருள் தந்து வருகிறது.
பூமிக்குள் இருக்கும் காளியே பில்லி, சூன்யம் இவைகளை நீக்குவதாக மக்கள் நம்புகின்றனர். வீரமகாமுனிக்கும், பூமி காளிக்கும் இன்றும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் கெடாவெட்டி படைக்கின்றார்கள். பாலாபிஷேகங்கள், அர்ச்சனை, ஆராதனைகள் பூமிக்குள் இருக்கும் காளிக்குச் செய்கிறார்கள். வீரப்பூர் காளிக்குப் பால், பொங்கல், தேங்காய், பழம் போன்றவைகளை வைத்துப் படைக்கின்றார்கள்.
காளி பூமிக்குள் சென்று விட்டாலும் தான் இருந்த இடத்தில் வேறு சிலை வைக்க அனுமதிக்கவில்லை. எனவே வீரப்பூர் மாகாளி திருவாச்சியில் அமர்ந்து அருள் தருகிறாள். வீரப்பூர் மாகாளிக்குத் துணையாக அண்ணன் வீரமகாமுனியும் அருகிலேயே அமர்ந்து இருக்கிறார்.
தல பெருமை
பல வருடங்களுக்கு முன்பு செம்முனி என்ற மனித ரத்தம் குடிக்கும் கொடுமையான தெய்வம் வசித்து வந்தது.அது கொடுமையான காவு வாங்கும் கூடியதாக இருந்தது அப்போது ஓர் குழந்தையை காவு வாங்கும் நோக்கோடு இருந்தது.அந்த குழந்தையின் தாய் வீரமமுனியிடம் குறையை சொல்லி அழுதாள் வீரமுனை தெய்வம் உடனே செம்முனியை பூமிக்குள் அழுத்திவிட்டதுபிறகு அந்த ஊர் மக்கள் வீரமமுனியை தங்கள் ஊரிலையே இருக்க வேண்டும்மக்கள் கேட்டு கொண்டதுபடி வீரமாமுனிவர் தன் தங்கையையும் அழைத்து வந்து செம்முனி அழிந்த இடத்தில் நிறுத்திஅருள் தந்து வருகிறது.பல வருடங்களுக்கு முன்பு செம்முனி என்ற மனித ரத்தம் குடிக்கும் கொடுமையான தெய்வம் வசித்து வந்தது.அது கொடுமையான காவு வாங்கும் கூடியதாக இருந்தது அப்போது ஓர் குழந்தையை காவு வாங்கும் நோக்கோடு இருந்தது.அந்த குழந்தையின் தாய் வீரமமுனியிடம் குறையை சொல்லி அழுதாள் வீரமுனை தெய்வம் உடனே செம்முனியை பூமிக்குள் அழுத்திவிட்டதுபிறகு அந்த ஊர் மக்கள் வீரமமுனியை தங்கள் ஊரிலையே இருக்க வேண்டும்மக்கள் கேட்டு கொண்டதுபடி வீரமாமுனிவர் தன் தங்கையையும் அழைத்து வந்து செம்முனி அழிந்த இடத்தில் நிறுத்திஅருள் தந்து வருகிறது.