Screen Reader Access     A-AA+
அருள்மிகு விருத்தபுரீஷ்வரர் திருக்கோயில், திருப்புனவாசல், ஆவுடையார்கோவில் வட்டம் - 614629, புதுக்கோட்டை .
Arulmigu Virutthapurishwarar Temple, Thiruppunavasal - 614629, Pudukkottai District [TM025436]
×
Temple History

தல வரலாறு

காசிக்கு முன் தோன்றிய திருத்தலம்

தல பெருமை

பாடல் பெற்ற தலங்கள் 234ல் இந்த தலமும் இடம் பெற்றுள்ளது

இலக்கிய பின்புலம்

புறநானூறுற்றில் புனலம் புதவு மிழலை முத்தூறு முதலிய ஊர்களை மாங்குடி கிழார் மாவேள் எவ்வி முதலிய சிற்றரசர்கள் ஆண்டதாக குறிப்பிடுகிறது. இதில் புனலம் புதவு என்பது ஆற்று நீர் கடலில் புகும் இடத்தை குறிக்கிறது. பிற்காலத்தில் இந்த இடம் திருப்புனவாசல் ஆகும்

புராண பின்புலம்

விருத்தபுரீஸ்வரர் மஹாத்மியம் என்னும் நூலில் இத்திருக்கோயிலானது காசிக்கு முன்தோன்றியது என்றும் இந்திரன், மாகவிஷ்ணு, பிரம்மா, ஐராவதம், நான்கு வேதங்கள் திரிசங்கு மஹாராஜா, கபிலர், அகஸ்தியர், காலன் என்று சொல்லக்கூடிய எமன், மஹாலட்சுமி போன்றோர்கள் பூஜித்ததாகவும், 10 தீர்த்தங்களை உள்ளடக்கியதாகவும் கூறுகிறது. இந்த விருத்தபரீஸ்வரர் மஹாத்தியமானது 14 அத்தியாயங்களை கொண்டது. இது சிவமகா புராணத்தில் ஒரு பகுதியாகும்.