அருள்மிகு ஆத்மநாதசுவாமி திருக்கோயில், ஆவுடையார்கோயில் - 614618, புதுக்கோட்டை .
Arulmigu Aathmanaathaswamy Temple, Avudaiyarkovil - 614618, Pudukkottai District [TM025457]
×
Temple History
தல வரலாறு
திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில், உலக உயிர்கள் வீடுபேறு பெறுவதற்குச் சாதனமாகப் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குத் துணையாக பெரும் துறையாக விளங்கும் தலம் ஆதலின் திருப்பெருந்துறை எனப் பெயர் பெற்றது. மக்களால் ஆவுடையார்கோயில் என்று வழங்கப்படுகிறது.
அரிமர்த்தன பாண்டியனிடம்முதலமைச்சராக இருந்த வாதவூரர்
கீழ்கடற்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றபோது அவரைக் குருந்த மரத்தின் கீழிருந்து குருவடிவில் இறைவன் ஆட்கொண்டு, அவரை மாணிக்கவாசகராக ஆக்கிய மாட்சிமை பெற்ற தலம். துரை பாண்டிய மன்னனின் சபையில் அமைச்சராக இருந்த வாதவூரர் (மாணிக்கவாசகர்), மன்னன் உத்தரவுப்படி குதிரை வாங்க இப்பகுதிக்கு (திருப்பெருந்துறை) வருகிறார். அப்போது இங்கு சிவாகமங்கள் ஒலிக்கும் ஒலி கேட்க அங்கு சென்று பார்க்கையில் ஞானகுருநாதர் ஒருவர் வீற்றிருப்பதைக் கண்டார். தன்னை ஏற்றுக்கொண்டு உபதேசமளிக்கும்படி மாணிக்கவாசகர் கேட்டுக்...திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில், உலக உயிர்கள் வீடுபேறு பெறுவதற்குச் சாதனமாகப் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குத் துணையாக பெரும் துறையாக விளங்கும் தலம் ஆதலின் திருப்பெருந்துறை எனப் பெயர் பெற்றது. மக்களால் ஆவுடையார்கோயில் என்று வழங்கப்படுகிறது.

கீழ்கடற்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றபோது அவரைக் குருந்த மரத்தின் கீழிருந்து குருவடிவில் இறைவன் ஆட்கொண்டு, அவரை மாணிக்கவாசகராக ஆக்கிய மாட்சிமை பெற்ற தலம். துரை பாண்டிய மன்னனின் சபையில் அமைச்சராக இருந்த வாதவூரர் (மாணிக்கவாசகர்), மன்னன் உத்தரவுப்படி குதிரை வாங்க இப்பகுதிக்கு (திருப்பெருந்துறை) வருகிறார். அப்போது இங்கு சிவாகமங்கள் ஒலிக்கும் ஒலி கேட்க அங்கு சென்று பார்க்கையில் ஞானகுருநாதர் ஒருவர் வீற்றிருப்பதைக் கண்டார். தன்னை ஏற்றுக்கொண்டு உபதேசமளிக்கும்படி மாணிக்கவாசகர் கேட்டுக் கொள்ள, குருவும் ஒப்புக் கொண்டார். உபதேசம் கேட்டு சிவநிஷ்டையிலிருந்து கலைந்த மாணிக்கவாசகர் குரு இல்லாதது கண்டு, சிவபெருமான்தான் குருவாக வந்தது என்று தெரிந்து கொண்டு உள்ளம் உருகி பாடினார். குதிரை வாங்க கொண்டு வந்த பணத்தில் ஆத்மநாதசுவாமி கோவிலைக் கட்டி சிவதொண்டில் ஈடுபடலானார். குதிரை வராத செய்தி கேட்டு மன்னன் மாணிக்கவாசகரை பிடித்து சிறையில் அடைத்தார். ஆவணி மூலத்தில் குதிரைகள் வரும் என்று சொல்லச் செய்த பெருமான் அவ்வாறே நரிகளைப் பரிகளாக்கி அவரே ஓட்டிக் கொண்டு மதுரை வந்து மன்னனிடம் ஒப்படைத்தார். அவ்வாறு செய்த இடம் நரிக்குடி என்று இன்று வழங்குகிறது. ஆனால் இரவிலேயே குதிரைகள் எல்லாம் நரிகளாகிப் போக, மன்னன் மாணிக்கவாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தி தண்டிக்க, வைகையில் வெள்ளம் வந்தது. கரையை அடைக்க சிவபெருமான், கூலியாளாக வந்து பிட்டு வாங்கி தின்று விட்டு வேலை செய்யாததால், பிரம்படி வாங்க அந்த அடி எல்லோர் முதுகிலும் விழ, வந்தது இறைவன் என்பதைத் தெரிந்து கொண்ட பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரின் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டான். இந்த சிறப்பு வாய்ந்த திருவிளையாடற் புராண கதை நிகழ காரணமானது இக்கோவில் ஆகும்.
தல பெருமை
இத்திருக்கோயில் உபயதாரர்கள், பக்தர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் திருக்கோயில் இராஜகோபுரம், விமானங்கள், சன்னதிகள், மண்டபங்கள் ஆகியவை வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டு, அழகிய கலை நுட்ப வேலைபடுகளுடன் கூடிய அருள்மிகு சங்கமேஸ்வரர் சன்னதி, அருள்மிகு வேதநாயகி அம்மன் சன்னதி மண்டபங்கள், தூண்களுக்கு, உயர்தர இரசாயண தொழில்நுட்ப முறையில், புதுபொழிவு ஏற்றப்பட்டு, கடந்த 06.05.2016அன்று சிறப்பான முறையில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.இத்திருக்கோயில் உபயதாரர்கள், பக்தர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் திருக்கோயில் இராஜகோபுரம், விமானங்கள், சன்னதிகள், மண்டபங்கள் ஆகியவை வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டு, அழகிய கலை நுட்ப வேலைபடுகளுடன் கூடிய அருள்மிகு சங்கமேஸ்வரர் சன்னதி, அருள்மிகு வேதநாயகி அம்மன் சன்னதி மண்டபங்கள், தூண்களுக்கு, உயர்தர இரசாயண தொழில்நுட்ப முறையில், புதுபொழிவு ஏற்றப்பட்டு, கடந்த 06.05.2016அன்று சிறப்பான முறையில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இலக்கிய பின்புலம்