தல வரலாறு
புதுக்கோட்டை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இத்திருக்கோயில் புதுக்கோட்டை நகர், புதிய பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி செல்லும் சாலையில் திருக்கோகர்ணத்தில் அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான மங்களா குளக்கரையில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. பெரியகுளம் பிள்ளையார் திருக்கோயில், மங்கள விநாயகர் திருக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் நாள்தோறும் காலசந்தி பூஜை நடைபெறுகிறது.