Screen Reader Access     A-AA+
அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில், புதுக்கோட்டை (ம) வட்டம் - 622001, புதுக்கோட்டை .
Arulmigu Varatharajaperumal Temple, Pudukkottai & Taluk - 622001, Pudukkottai District [TM025502]
×
Temple History

தல வரலாறு

புதுக்கோட்டை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இத்திருக்கோயில் புதுக்கோட்டை நகர் மத்தியில் கீழ 3ம் வீதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 5 நிலை இராஜகோபுரத்துடன் ஒரு சுற்றுப்பிரகாரம் கொண்ட திருக்கோயிலாகும். புதுக்கோட்டை நகரில் உள்ள புகழ்பெற்ற வைணவத் திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் மூலவர் அருள்மிகு வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயாருடன் அருள்பாலிக்கின்றார். இத்திருக்கோயிலின் பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார் சந்நிதி, அலர்மேல்மங்கை தாயார் சந்நிதி, ஆஞ்சநேயர் சந்நிதி ஆகியவை உள்ளன. இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விழா 10 நாட்களும், மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா 20 நாட்களும் திருவிழா நடைபெறும்