Screen Reader Access     A-AA+
அருள்மிகு சாந்தநாதசுவாமி திருக்கோயில், புதுக்கோட்டை (ம) வட்டம் - 622001, புதுக்கோட்டை .
Arulmigu Santhanathaswami temple, Pudukkottai & Taluk - 622001, Pudukkottai District [TM025506]
×
Temple History

தல வரலாறு

கல்வியில் மேன்மையடைய குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது அருள்மிகு வேதநாயகி அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வருதல் இத்தலத்தின் சிறப்பாகும். 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயில். சோழர்கால, பாண்டியர் கால கல்வெட்டுகள் கொண்ட தொன்மையான திருக்கோயில். மனைகளில் உள்ள கோளாறுகள் நீங்கவும், மன அமைதி பெறவும், கடன் தொல்லை நீங்கவும், அருள்மிகு சாந்தநாதரை வழிபட்டு வருவது வழக்கம். சுவாமி சன்னதியின் மேல் விமானத்தில் உள்ள கல்வெட்டில் இக்கோயிலை குலோத்துங்க சோழீச்சரம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.