Screen Reader Access     A-AA+
அருள்மிகு விட்டோபா திருக்கோயில், புதுக்கோட்டை நகர் (ம) வட்டம் - 622001, புதுக்கோட்டை .
Arulmigu Vittoba Temple, Pudukkottai Nagar & Taluk - 622001, Pudukkottai District [TM025527]
×
Temple History

தல வரலாறு

புதுக்கோட்டை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 223 திருக்கோயில்களில் அருள்மிகு விட்டோபா திருக்கோயிலும் ஒன்றாகும். இத்திருக்கோயில் புதுக்கோட்டை நகர் மத்தியில் பல்லவன் குளத்தின் வடகரையில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் ஒரு பிரகாரத்துடன் கூடிய திருக்கோயிலாகும். மூலவர் விட்டோபா மற்றும் இரகுமாயி. சுற்றுப்பிரகாரத்தில் வேணுகோபாலன் சன்னதி, தன்மந்தரி சன்னதி மற்றும் வீர ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. சொர்க்கவாசலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மற்றும் புரட்டாசி சனிக்கிழமை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலேயே மருத்துவக்கடவுள் தன்மந்திரிக்கு இத்திருக்கோயிலில் தான் சன்னதி அமையப்பெற்றுள்ளது. மாதந்தோறும் அமாவாசை அன்று மூலிகை அபிஷேகம் செய்யப்படுகிறது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு நோய் நீங்கி பெற்றுச் செல்கின்றனர்.