தல வரலாறு
சித்தர்கள் விராலி மரங்களாக இருந்து முருகனை வழிபடுவது இத்தலத்தின் சிறப்பு. விராலிமலை முருகன் ஆலயம் கத்தலூர், பேராம்பூரை ஆண்ட அழகிய மணவாளத்தேவர் என்பவர் கட்டியதாக வரலாறு தெரிவிக்கின்றது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டு மூலம் ஆதித்த சோழன் இக்கோயிலுக்கு திருப்பணி செய்து சிறப்பித்தான் என தெரிய வருகிறது. விஜய நகர பேரரசர்களும், மதுரை நாயக்கர்களும், பாளையக்காரர்களும் விராலிமலை கோயிலை விரிவுபடுத்தி மதில்கள், மண்டபங்கள் கட்டியதாக தெரியவந்துள்ளது. அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி வழங்கயி தலம். அருணகிரிநாதரால் 16 திருப்புகழ் பாடல்கள் பாடப்பெற்ற திருத்தலமாகும். கருப்ப முத்துப்பிள்ளை என்ற பக்தருக்காக உச்சிக்கால பூஜையின் போது, சுருட்டு நைவேத்தியம் இன்றளவும் செய்யப்படுவது மிகவும் சிறப்பு.