அருள்மிகு நவநீதகிருஷ்ண பெருமாள் திருக்கோயில், அரசலூர், அரசலூர் - 621203, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Navaneethakrishaperumal Temple, Arasalur - 621203, Thiruchirappalli District [TM025713]
×
Temple History
தல வரலாறு
மைசூரிலிருந்து ஆசூரிவை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீரங்க பெருமாளை தரிசனம் செய்ய சென்றபோது, அரசலூர் வரும்வழியில் பெரும் சூராவளி காற்றில் சிக்கியபொழுது, இத்தல இறைவனால் காப்பாற்றபெற்று இவ்விடத்தில் தங்க வைக்கப்பட்டதால், அவர்களால் உருவாக்கப்பட்டதுதான் இத்திருக்கோயில் என்று பேச்சு வழக்கில் தலவரலாறு கூறப்பட்டு வருகிறது. மேலும் இத்திருக்கோயிலில் உள்ள பத்மாவதி தாயாரின் கரம் பக்தர்களை அழைக்கும் பாணியில் இருப்பதால் இவளுக்கு அழைத்து ...மைசூரிலிருந்து ஆசூரிவை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீரங்க பெருமாளை தரிசனம் செய்ய சென்றபோது, அரசலூர் வரும்வழியில் பெரும் சூராவளி காற்றில் சிக்கியபொழுது, இத்தல இறைவனால் காப்பாற்றபெற்று இவ்விடத்தில் தங்க வைக்கப்பட்டதால், அவர்களால் உருவாக்கப்பட்டதுதான் இத்திருக்கோயில் என்று பேச்சு வழக்கில் தலவரலாறு கூறப்பட்டு வருகிறது. மேலும் இத்திருக்கோயிலில் உள்ள பத்மாவதி தாயாரின் கரம் பக்தர்களை அழைக்கும் பாணியில் இருப்பதால் இவளுக்கு அழைத்து வாழ்விப்பவள் என்ற சிறப்பு பெயரும் பெற்றுள்ளார்.
தல பெருமை
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் அரசலுரில் குடி கொண்டுள்ள ருக்மணி சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ண பெருமாள் 700 ஆண்டுகளுக்கு முன் ஆசரி வம்சத்தினாரால் சிறு குடிசையில் குடி கொண்டு இருந்தார். பிற்கால கிராமத்தில் தற்போது பெரிய கட்டிடத்தில் இருந்து மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோலில் ஸ்ரீதேவி பூதேரி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாளும் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் ஸ்தாபிதம் செய்து அருள்பாலித்து வருகிறார்கள். இங்கு துவார பாலகர்கள் இராமனுஜர் தேசிகர் நம்மாழ்வார். விஸ்வஸேனரும் எழுந்தருளி அருள்பாலித்து கொண்டிருக்கிறார்கள். இங்கு கருடனும் அருள்பாலிக்கிறார். இங்குள்ள கம்பத்தடியார் ஆஞ்சநேயர் மிகவும் பிரசித்த பெற்றவர்....திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் அரசலுரில் குடி கொண்டுள்ள ருக்மணி சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ண பெருமாள் 700 ஆண்டுகளுக்கு முன் ஆசரி வம்சத்தினாரால் சிறு குடிசையில் குடி கொண்டு இருந்தார். பிற்கால கிராமத்தில் தற்போது பெரிய கட்டிடத்தில் இருந்து மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோலில் ஸ்ரீதேவி பூதேரி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாளும் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் ஸ்தாபிதம் செய்து அருள்பாலித்து வருகிறார்கள். இங்கு துவார பாலகர்கள் இராமனுஜர் தேசிகர் நம்மாழ்வார். விஸ்வஸேனரும் எழுந்தருளி அருள்பாலித்து கொண்டிருக்கிறார்கள். இங்கு கருடனும் அருள்பாலிக்கிறார். இங்குள்ள கம்பத்தடியார் ஆஞ்சநேயர் மிகவும் பிரசித்த பெற்றவர். மக்கள் கோரும் வரங்களை வாரி வழங்கும் குணம் உடையவர். மிகவும் சக்தி வாய்ந்தவர். இங்குள்ள எல்லா பெருமாள்களும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்கள். கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணத்தை நடத்தி வைப்பார்கள். குழந்தை இல்லதாவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருள்வார்கள். தீராத வியாதிகளை தீர்த்து. வைப்பவர்கள். மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்களையும் நன்முறையில் குணப்படுத்தி வைப்பவர்கள். ஆகையால் இங்குள்ள தெய்வங்களை மனதால் நினைப்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் கொடுப்பார்கள்.
இங்குள்ள நவநீதகிருஷ்ணனிடம் குழந்தை பிராத்தனை செய்வதன் மூலம நீண்ட கால குழந்தையின்மை நீங்கும். சொத்து தகராறு நில சிக்கல் அனைத்தும் தர்மம் சார்ந்தே நீங்கும். குழந்தையின் கல்விக்கு வித்தையாய் அருள்பாலிக்கிறார்.
இங்குள்ள தனித்தாயார் மிகவும் சக்தி வாய்ந்தவர். அழைத்து வாழ்விக்கும் குணம் உள்ள தாயார் கருணையடன் மக்கட் செல்வங்களுக்கு அருள்பாலிப்பார்.