ஒரு நல்ல வழி கிடைக்கணுமே என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். அந்த நம்முடைய எதிர்பார்ப்புகளையெல்லாம் ஈடேற்றித் தருவதால், இந்த முருகனுக்கு, வழிவிடு முருகன் என்றே பெயர் அமைந்ததாகச் சொல்கிறார்கள் பக்தர்கள்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும், ரவுண்டானா பகுதியில் ரயில்நிலையத்தைப் பார்த்தபடி அமைந்திருக்கிறது வழிவிடு முருகன் கோயில்.

மிகச் சிறிய கோயில்தான். ஆனாலும் கீர்த்தியில் உயர்ந்திருக்கிறது இந்தத் திருத்தலம். ஊருக்குக் கிளம்பிச் செல்பவர்களும் சரி... ஊருக்குள் வந்து இறங்குபவர்களும் சரி... சந்நிதியில் நின்று வழிவிடும் முருகனிடம் வேண்டிக் கொண்டுதான் செல்கின்றனர்.
அழகே உருவெனக் கொண்டு,...ஒரு நல்ல வழி கிடைக்கணுமே என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். அந்த நம்முடைய எதிர்பார்ப்புகளையெல்லாம் ஈடேற்றித் தருவதால், இந்த முருகனுக்கு, வழிவிடு முருகன் என்றே பெயர் அமைந்ததாகச் சொல்கிறார்கள் பக்தர்கள்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும், ரவுண்டானா பகுதியில் ரயில்நிலையத்தைப் பார்த்தபடி அமைந்திருக்கிறது வழிவிடு முருகன் கோயில்.
ஒரு நல்ல வழி கிடைக்கணுமே என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். அந்த நம்முடைய எதிர்பார்ப்புகளையெல்லாம் ஈடேற்றித் தருவதால், இந்த முருகனுக்கு, வழிவிடு முருகன் என்றே பெயர் அமைந்ததாகச் சொல்கிறார்கள் பக்தர்கள்.
மிகச் சிறிய கோயில்தான். ஆனாலும் கீர்த்தியில் உயர்ந்திருக்கிறது இந்தத் திருத்தலம். ஊருக்குக் கிளம்பிச் செல்பவர்களும் சரி... ஊருக்குள் வந்து இறங்குபவர்களும் சரி... சந்நிதியில் நின்று வழிவிடும் முருகனிடம் வேண்டிக் கொண்டுதான் செல்கின்றனர்.
அழகே உருவெனக் கொண்டு, அற்புதமாகக் காட்சி தருகிறான் வடிவேலன். செவ்வாய்க்கிழமைகளில், பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. ரயில் நிலையத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் செல்லும் சாலையின் இரண்டு பக்கமும் கடைகள் வரிசைகட்டி நிற்கின்றன. இந்தக் கடைக்காரர்களில் பெரும்பாலோனோர், தினமும் வழிவிடும் முருகனைத் தரிசித்து வணங்கிவிட்டுத்தான், கடையைத் திறந்து வியாபாரத்தைத் தொடங்குகிறார்கள்.
அதேபோல், ஜங்ஷன் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள், புதிதாக இரு சக்கர வாகனமோ கார் முதலான நான்கு சக்கர வாகனமோ வாங்கினால், வாங்கிய கையுடன் வழிவிடும் முருகன் கோயில் வாசலில் வந்து நிறுத்துகின்றனர். வண்டிச் சாவியை முருகன் காலடியில் வைத்து வேண்டிக் கொள்கின்றனர். வண்டிக்கு சந்தனம் குங்குமமிட்டு, மாலை அணிவித்து, சூடமேற்றி பூஜை செய்யப்படுகிறது. அதன் பிறகே வண்டியை எடுத்துச் செல்கின்றனர்.
இப்படிச் செய்வதால், வாகன விபத்து ஏதும் நேராமல் வழிவிடும் முருகன் காத்தருள்வான். செல்லும் வழியெங்கும் துணைக்கு வருவான் என்று போற்றுகின்றனர், பக்தர்கள்