தல வரலாறு
இத்திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். மூலவர் சுயம்பு வடிவில் காட்சியளிக்கிறார். அம்பாள் திருநாமம் குங்குமசௌந்தரியாகும்.கிழக்கு நோக்கி அம்பாள் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இத்திருத்தலம் பல்குனி நதிக்கரையில் அமைய்ப்பெற்றுள்ளது. இத்தலம் மன்மதபுரம், மன்மத சேத்திரம், பூவாளியூர்,தட்சிணகயாபுரி என பலப்பெயர்களால் அழைக்கப்படுககிறது .செல்வம் கொழிக்கும் ஆதலால் செல்வபுரி என்ற சிறப்பு பெயரும் உண்டு. பித்ருதோஷ நிவர்த்தி மற்றும் திருமண தோஷம் நிவர்த்தி தலமாக விளங்குகிறது. ரதிக்கு பதி அளித்த சிற்ப்பு தலமாக விளங்குகிறது.