அருள்மிகு தாருகாவனேஸ்வரர் திருக்கோயில், Mookambur, Thirupparaithurai - 639115, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Tharuganeshwarar Temple, Mookambur, Thirupparaithurai - 639115, Thiruchirappalli District [TM025820]
×
Temple History
தல வரலாறு
திருச்சியிலிருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை யில் 17 வது கிலோமீட்டரில் இத்திருக்கோயிலில் அமைந்துள்ளது. காவேரி யின் தென் கரையில் 127 சிவ ஸதலங்களில் மூன்றாவது பெருமையுடைய பாடல் பெற்ற திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் பராய் மரங்கள் நிறைந்த ஸ்தலமாக உள்ளதால் பராய்த்துரைநாதர் என்ற பெயரையும் பெற்றுள்ளது. இறைவன் சுயம் பு லிங்கமாகவும். ஸ்தல இறைவி பசும்பொன் மயிலாம்பிகை என்றும் ஹேம வர்னாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறது.
இத்திருப்பறாய்த்துறையை மாணிகவாசகரை பாடச்சொல்லி திருஅகவலில் பராய்த்துரை மேவிய பரனே போற்றி. திருச்சி ராப்பள்ளி மேவிய சிவனே போற்றி. சிவபெருமான் தானே உவந்து தன்னுடைய இரு கையாக செய்து கொண்டார் என்பதுதான் இத்தலத்தின் சிறப்பு. இத்திருக்கோயில் கல்வெட்டுகளிலிருந்து...திருச்சியிலிருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை யில் 17 வது கிலோமீட்டரில் இத்திருக்கோயிலில் அமைந்துள்ளது. காவேரி யின் தென் கரையில் 127 சிவ ஸதலங்களில் மூன்றாவது பெருமையுடைய பாடல் பெற்ற திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் பராய் மரங்கள் நிறைந்த ஸ்தலமாக உள்ளதால் பராய்த்துரைநாதர் என்ற பெயரையும் பெற்றுள்ளது. இறைவன் சுயம் பு லிங்கமாகவும். ஸ்தல இறைவி பசும்பொன் மயிலாம்பிகை என்றும் ஹேம வர்னாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறது.
இத்திருப்பறாய்த்துறையை மாணிகவாசகரை பாடச்சொல்லி திருஅகவலில் பராய்த்துரை மேவிய பரனே போற்றி. திருச்சி ராப்பள்ளி மேவிய சிவனே போற்றி. சிவபெருமான் தானே உவந்து தன்னுடைய இரு கையாக செய்து கொண்டார் என்பதுதான் இத்தலத்தின் சிறப்பு. இத்திருக்கோயில் கல்வெட்டுகளிலிருந்து கி.பி ஆறாம் நூற்றாண்டில் சோழ ராஜாக்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். பின்னர் நாளடைவில் இளையான்குடி மரபினரான வெ.வீர. நாகப்ப செட்டியார் காலத்திலும் அதன்பின் அவரது வாரிசு காலத்திலும் புதுப்பித்து 26.05.1940 ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.