Screen Reader Access     A-AA+
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், காட்டுப்புத்தூர் - 621207, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Meenachi Sundhareswarar Temple, Kattuputhur - 621207, Thiruchirappalli District [TM025838]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயிலில் மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரா் காட்சியளிக்கின்றார். சுவாமி கிழக்கு முகமாகவும் மீனாட்சியமை்மை தெற்கு முகமாகவும் உறைகின்றனா். இத்திருக்கோயிலின் பிரகாரத்தில் அருள்மிகு விநாயகா், அருள்மிகு அருணாசலேஸ்வரா், அருள்மிகு கைலாசநாதா், அருள்மிகு சுப்பிரமணியா், அருள்மிகு சூரியன், அருள்மிகு பைரவா் உள்ளனா். இத்திருக்கோயில் புராண சம்பந்தம் உள்ளது அல்ல. இது ஓா் வைப்புத்தலமாகும். இத்திருக்கோயில் திருச்சிராப்பள்ளியிலிருந்து மேற்கே சுமார் 70 கி.மீ தூரத்தில் காட்டுப்புத்தூா் என்னும் திருத்தலம் உள்ளது. இது தொட்டியம் வட்டத்தைச் சார்ந்தது. இவ்வூருக்கு நகரப் பேருந்துகளும், புறநகரப் பேருந்துகளும் வந்து செல்கின்றன. இவ்வூருக்கு கரூரிலிருந்தும், நாமக்கல்லிருந்தும் திருச்சியில் இருந்தும் வந்துசேரலாம். இவ்விடம் உணவு விடுதிகள் உண்டு. இவ்வூருக்கு சற்று தொலைவில் காவிரி நதி ஓடுகிறது.