தல வரலாறு

பராந்தக சோழன், முதலாம் இராசராசன் முதற்குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன், சுந்தரபாணடியன், விசயநகர வேந்தரான கிருஷ்ணதேவராயர், ஹொய்சல மன்னன் ஆகியோர் வழிபட்டுத் திருப்பணிகள் செய்து சிறப்பித்தனர். முதலாம் இராசராசன் தான் வழிபட்டதற்கு அறிகுறியாக இங்கு இராசராச விடங்கள் என்ற ஒரு சிவலிங்க மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்தாக்க் கலவெட்டு ஒன்று கூறுகிறது.