தல வரலாறு
இத்திருக்கோயில் காவிரி ஆற்றின் வடபால் சுமார் 20 கி.மீ. தொலைவில் திருச்சி - துறையூர் மெயின்ரோட்டில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் சிவபெருமான் கிழக்கு முகமாகவும், அம்பாள் தெற்கு முகமாகவும் பார்த்து காட்சி தருகின்றனர். இத்தலத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் நீண்ட ஆயுளோடும், செல்வ செழிப்போடும், புத்திர பாக்கியத்தோடும் வாழ்ந்து வருவதால், இத்தலத்தில் பல தருணங்கள் நடைபெறுகின்றது.