தல வரலாறு
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், மருதூர், அருள்மிகு விநாயகர் திருக்கோயில் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயிலின் உபகோயிலாகும். இத்திருக்கோயில் செல்லாண்டியம்மன் மற்றும் ஆரா அமுதேஸ்வரர் திருக்கோயிலின் காலத்ததாகவே கருத வேண்டும். அரச மரத்தடியில் இருந்த விநாயகர் திருக்கோயில் செல்லாண்டியம்மன் திருக்கோயிலை புணரமத்த காலத்தில் இத்திருக்கோயிலை புணரமைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.