இரணியம்மன் வரலாறு மற்றும் இருப்பிடம்.
கயிலாய மலையில் இருந்து தவம் புரிவதற்காக பார்வதி தேவி பூலோகத்திற்கு அகிலாண்ட நாயகியாக எழுந்தருளுகிறாள். காவிரி நதியிலிருந்து நீரை கையில் ஏந்திய வண்ணம் தூய அன்போடு நினைக்க சிவன் நீர் வடிவம் கொண்டு செழுநீர்த்திறள்நாதராக எழுந்தருளி அருள் பாலிக்கிறார். அவ்வாறு வழிபாடு ஆற்றும் வேளையில் இரணியன் என்ற பெயருடைய அசுரன் அம்பிகைக்கு இடையூறு விளைவிக்கும் வண்ணம் சில காரியங்களைச் செய்கிறான். இதனால் பொறுமை இழந்த அம்மை தனது ஒன்பது சக்தி களிலே ஒன்றான காளி அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்து அவனுடைய குடலையே மாலையாக அணிந்து கொள்கிறாள். அதனால் தான் நம்முடைய திருவானைக்கா திருத்தலத்தினுடைய மேற்கு சன்னதி தெருவில் காளி கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது....இரணியம்மன் வரலாறு மற்றும் இருப்பிடம்.
கயிலாய மலையில் இருந்து தவம் புரிவதற்காக பார்வதி தேவி பூலோகத்திற்கு அகிலாண்ட நாயகியாக எழுந்தருளுகிறாள். காவிரி நதியிலிருந்து நீரை கையில் ஏந்திய வண்ணம் தூய அன்போடு நினைக்க சிவன் நீர் வடிவம் கொண்டு செழுநீர்த்திறள்நாதராக எழுந்தருளி அருள் பாலிக்கிறார். அவ்வாறு வழிபாடு ஆற்றும் வேளையில் இரணியன் என்ற பெயருடைய அசுரன் அம்பிகைக்கு இடையூறு விளைவிக்கும் வண்ணம் சில காரியங்களைச் செய்கிறான். இதனால் பொறுமை இழந்த அம்மை தனது ஒன்பது சக்தி களிலே ஒன்றான காளி அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்து அவனுடைய குடலையே மாலையாக அணிந்து கொள்கிறாள். அதனால் தான் நம்முடைய திருவானைக்கா திருத்தலத்தினுடைய மேற்கு சன்னதி தெருவில் காளி கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இரணியனை வதம் செய்த அம்மன் என்ற காரணத்தினால் அகிலாண்ட நாயகிக்கு இரணியம்மன் என்ற பெயர் ஏற்பட்டது.
இரணியம்மன் கோவில் இருப்பிடம்.
திருவானைக்கா திருத்தலத்திலிருந்து கிழக்கு நோக்கி இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த அம்மனே இவ்வூர் மற்றும் இவ்வூரில் வாழும் அனைவருக்கும் முழுவதுமாக காவல் தெய்வமாக இருந்து அருள் பாலிக்கிறாள். திரு கோயிலுக்குள் உள்ள அம்மன் வடக்கு நோக்கி காட்சி தருகிறாள்.