Arulmigu Veerapathirar Temple, Near Jembugeswarar Temple, Thiruchirappalli - 620005, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Veerapathirar Temple, Near Jembugeswarar Temple, Thiruchirappalli - 620005, Thiruchirappalli District [TM026165]
×
Temple History
தல வரலாறு
தலவரலாறு இல்வீரபத்திர சுவாமி திருக்கோயில் வரலாறு.
சிவனுடைய நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் தான் வீரபத்திரர். நாவலம் தீவிற்கு எழுந்தருளிய அகிலாண்ட நாயகியினுடைய தவத்தை பாதுகாக்கும் பொருட்டு வீரபத்திரர் இங்கு எழுந்தருளி அம்மைக்கு பாதுகாவலராகத் திகழ்கிறார். திருவானைக்கா திருத்தலத்தில் உள்ள ஐந்தாம் பிரகாரத்து
மேற்கு சுற்றில் கிழக்கு நோக்கியவராக காட்சி தருகிறார் வீரபத்திரர்.
வீரபத்திரர் பற்றிய சில தகவல்கள்.
சிவனை அவமரியாதை செய்து நடத்தப்பட்ட தக்கன் வேள்வியில் பங்கு கொண்ட பிரம்மனுடைய(சுருதியான்) தலையையும், கலைவாணியின்(நாமகள்) நாசியையும், சுடரவனுடைய(அகனி) கரத்தையும் மற்றும் பகலவனுடைய (பருதியான்) பல்லையும் தகர்த்து அருள் செய்த பரமனாரின் மற்றொரு உருவம் தான் வீரபத்திரர்.
இந்த வரலாற்றினை விளக்கும் சான்றாக சீர்காழி திருத்தலத்திற்கு திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச்செய்த 3-118-5 அதாவது,...தலவரலாறு இல்வீரபத்திர சுவாமி திருக்கோயில் வரலாறு.
சிவனுடைய நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் தான் வீரபத்திரர். நாவலம் தீவிற்கு எழுந்தருளிய அகிலாண்ட நாயகியினுடைய தவத்தை பாதுகாக்கும் பொருட்டு வீரபத்திரர் இங்கு எழுந்தருளி அம்மைக்கு பாதுகாவலராகத் திகழ்கிறார். திருவானைக்கா திருத்தலத்தில் உள்ள ஐந்தாம் பிரகாரத்து
மேற்கு சுற்றில் கிழக்கு நோக்கியவராக காட்சி தருகிறார் வீரபத்திரர்.
வீரபத்திரர் பற்றிய சில தகவல்கள்.
சிவனை அவமரியாதை செய்து நடத்தப்பட்ட தக்கன் வேள்வியில் பங்கு கொண்ட பிரம்மனுடைய(சுருதியான்) தலையையும், கலைவாணியின்(நாமகள்) நாசியையும், சுடரவனுடைய(அகனி) கரத்தையும் மற்றும் பகலவனுடைய (பருதியான்) பல்லையும் தகர்த்து அருள் செய்த பரமனாரின் மற்றொரு உருவம் தான் வீரபத்திரர்.
இந்த வரலாற்றினை விளக்கும் சான்றாக சீர்காழி திருத்தலத்திற்கு திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச்செய்த 3-118-5 அதாவது, மூன்றாம் திருமுறையில் 118 வது திருப்பதிகத்தில் ஐந்தாவது பாடலிலே காணலாம்.
சுருதியான் றலையும் நாமகள் மூக்குஞ் சுடரவன் கரமுமுன் னியங்கு
பருதியான் பல்லும் இறுத்தவர்க் கருளும் பரமனார் பயின்றினி திருக்கை
விருதினான் மறையும் அங்கமோ ராறும் வேள்வியும் வேட்டவர் ஞானங்
கருதினா ருலகிற் கருத்துடை யார்சேர் கழுமல நகரென லாமே.
லை