தல வரலாறு

முன்னொரு காலத்தில் நாககன்னிகை ஒருத்தி பாதாளலோகத்தில் இருந்து சிவலிங்கம் ஒன்றை கொண்டு வந்து இத்தலத்தில் உள்ள வில்வமரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள்பெற்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் இந்த லிங்கத்தை இந்திரன், பிடாரி, அய்யனார் முதலானோர் பூஜித்து அருள் பெற்றதாகத் தெரிகிறது. வேணுவன முனிவர் இத்தலத்தில் பலகாலம் தங்கி தபசு செய்து இறைவன் திருவடியை அடைந்ததால் இத்தலம் வேணுபுரி எனவும், இறைவன் வேணுபுரிஸ்வரர் என்றும் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.