தல வரலாறு
ஆண்டுதோறும் சித்திரை மாதம் 17,18,19 ஆகிய மூன்று தினங்களில் சூரிய பகவான் தனது கதிர்களை இத்தல இறைவன் மீது வீழ்த்தி சூரியபூஜை நடத்துகிறார். இத்தலத்தின் தெற்கு ராஜகோபுரத்தின் வாயிலின் விதானத்தில் ஸ்ரீசக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது மிகச் சிறப்பான ஓர் அம்சமாகக் கருதப்படுகிறது. இத்திருக்கோயிலில் உள்ள உற்சவர் நடராஜர் விக்ரகத்தின் பின்புற திருவாட்சியில் 27 நட்சத்திரங்களின் அட்சரங்கள் பொறிக்கப்பட்டிருப்பது வேறெங்குமே காணமுடியாத ஓர் சிறப்பு அம்சமாகும். ஸ்தல விருட்சம் - வேணு விருட்சம் மூங்கில் ஸ்தல தீர்த்தம் - வேணு தீர்த்தம் இறைவன் - வேணு காசிநாதர் இறைவி - வேணு காசி விசாலாட்சி