தல வரலாறு
கரிகால சோழன் கல்லணையை கட்டுவதற்கு உறையூரிலிருந்து செல்லும் பொழுது காவிரியில் வெல்லம் வந்ததால் திருக்கோயில் அமைந்துள்ள பனையக்குறிச்சி கிராமத்திலிருந்து கரிகால சோழன் இறைவனை வேண்டிய பொழுது இத்தலத்தில் காசிவிஸ்வநாதரை நிர்மானித்து வழிபட தடைகள் அகலும் என்று அசரீரி ஒலித்ததால் கரிகால சோழன் காசியிலிருந்து காசிவிஸ்வநாதரையும், விசாலாட்சியையும் கொண்டு வந்து இங்கு ஸ்தாபித்து திருக்கோயில் எழுப்பியதாக செவிவழி செய்தி உள்ளது.