தல வரலாறு
தலசிறப்பு-உய்யக்கொண்டான் ஆறு கோரையாறு குடமுருட்டி ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் ஒன்றாக குழுமும் இடம் குழுமி என அழைக்கப்படுகிறது. குழுமியில் அமைந்துள்ள அம்மன் ஆதலால் குழுமாயி என அழைக்கப்படுகிறது. வரலாற்று சிறப்பு-முகப்பு மண்டபத்தில் கிழக்குப்புறத்தில் கி,பி,1812ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேக கல்வெட்டு ஒன்று உள்ளது. மண்டபத்தின் மேலே பாண்டியர்களின் சின்னமான மீன் சின்னம் இரண்டு பொறித்து வைக்கப்பட்டுள்ளது. சதுர பகுதிகளில் மீன், ஆமை, தாமரை ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளது. தனிச்சிறப்பு-கூந்தற் பனையில் நடுக்குருத்தை வெட்டி அதைப் பழுக்க வைத்து விசுவகர்மாவால் ஆசாரி ஓலைப்பிடாரி செய்யப்பட்டு அதற்கு வேண்டிய நகைகளை அணிவித்து புறப்பாட்டு அம்பாளாக ஓலைபிடாரி தேரில் வலம் வரும் மாசி பெருந்திருவிழா குட்டிகுடித்தல் விழா தனிச்சறப்பு.