Screen Reader Access     A-AA+
Arulmigu amarasundareswarar Temple, Singalanthapuram - 621014, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Amarasundareswarar Temple, Singalanthapuram - 621014, Thiruchirappalli District [TM027192]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயிலில் காணப்படும் முதலாம் இராஜேந்திரனின் கல்வெட்டு வள்ளுவவாடி நாட்டில் கரிகால கண்ணவளநாடு என்ற பிரிவில் சிங்களாந்தபுரம் அமைந்துள்ளதை தெரிவிக்கிறது. மாமன்னன் முடிசூடிய கி.பி.1017ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நடத்தி அன்று அன்று அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு 7 நாட்கள் திருவிழா நடத்த கீரம்பூர் கிராமத்தில் நிலம் தனமாக அளித்துள்ளான். மேலும், கொல்லிமலையில் உள்ள பிளந்துர் என்ற கிராமத்தை அவ்வூர் மக்கள் தேவதானமாக வழங்கியுள்ளனர். அம்மன் சன்னதி நாயக்கர் கால சிற்பக்கலை நயத்துடன் விளங்குகிறது. அம்மன் மேலிருகையில் உள்ள அட்சமாலை ஞானத்தையும், தாமரைமலர் செல்வத்தையும் வழங்கும் குறிப்பில் அமைந்துள்ளது. குலோத்துங்க சோழனது கி.பி.1102 கல்வெட்டில் இக்கோயிலுக்கு நிலம் தானமாக அளிக்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. பாண்டிய மன்னன் ஜடா வர்மன் சுந்தரபாண்டியன் தனது நன்மைக்காக குரும்பானுர் என்ற ஊரை...