தல வரலாறு

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சிறுவாக்கம் கிராமத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பகால நோய்கள் ஏற்படுகின்றன. இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்க கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர். இந்தத் தெய்வம் மாரி(மழை)அம்மன் என்று அழைக்கப்படுகிறது.