Screen Reader Access     A-AA+
அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில், Alakarai - 621209, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Venkataramanaswamy Temple, Alakarai - 621209, Thiruchirappalli District [TM027443]
×
Temple History

தல பெருமை

காவேரி அலைகள் எம்பெருமானிம் அடிவருத்தி அஞ்சலி செய்துகொண்டு இருந்தபடியால் இந்த ஸ்தலத்திற்கு அலகரை என்று பெயர் . இங்கு பெருமாள் எழுந்தருளி உள்ள இடத்தை தாரங்கதேஸ்வரம் என முன்பு முன்னோர்களால் சொல்லப்பட்டு வந்தது. இந்த தலத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத வெங்கடாஜலபதி பெருமாள் அச்சவரமாக வடக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.இங்கு அருள்பாலித்து வரும் பெருமாள் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் என்று பெயரும் உண்டு இந்த ஒரு திருக்கோயிலுக்கு வந்தால் 108 திவ்ய தேசங்களுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்ததற்கு சமம் என சொல்லப்படுகிறது.