Screen Reader Access     A-AA+
அருள்மிகு அழகிய சிங்கபெருமாள் திருக்கோயில், Kancheepuram - 631502, காஞ்சிபுரம் .
Arulmigu Azhagiya Singaperumal Temple, Kancheepuram - 631502, Kancheepuram District [TM002762]
×
Temple History

தல வரலாறு

எம்பெருமான் நரசிம்ம அவதாரம் எடுத்த காலை ஹஸ்திசைலம் என்னும் குகையிலிருந்து புறப்பட்டு இரண்யனது மாளிகையின் தூணிலிருந்து வெளிப்பட்டபோது வேறொரு நரசிம்ம வடிவங்கொண்டு தம்மைத் தாக்க வந்த அசுரங்களை விரட்டிக் கொண்டே செல்ல இவ்விடத்திற்கு வந்தது அசுரக் கூட்டங்கள் கண்காணா இடத்திற்கு ஓடி ஒளிந்து கொண்டதால், இனி அசுரர்கள் வந்தாலும் அவர்களை எதிர்ப்பதற்கு இவ்விடமே பொருத்தமானது என்றெண்ணி, இவ்விடத்தின் எழிலில் பற்றுக் கொண்டு இங்கேயே இருக்க ஆசைப்பட்டார். இவ்விடத்திலேயே யோக நரசிம்மராகி அமர்ந்து விட்டார். காமாஷிகா நரசிம்ம சன்னதி என்றும் இதற்கொரு பெயருண்டு.

தல பெருமை

வேதங்களின் கடைசி பகுதியான உபநிடதங்களால் போற்றப்படுபவன் இந்த யோகா நரசிம்மப் பெருமாள். இவர் அற்புத வடிவங்கொண்டு வேகவதி ஆற்றின் தென்புறத்தில் வேளுக்கை என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியுள்ளார். இரண்யன் கேட்டுப்பெற்ற வரத்திற்கு முரண்பாடின்றி அவனைக் கொல்வதற்காக ஸ்ரீயோகா நரசிம்ம வடிவங்கொண்ட எம்பெருமானே இரணியன் தன் புத்திரனான பரமபாகவதன் ப்ரஹ்லாதாழ்வானைப்பலவகையிலும் துன்புருத்தினான் அதனால் இரணியன் தட்டிய தூணினின்று தோன்றினார். அப்போது நரசிம்மப்பெருமாள் இரணியனை வதம்செய்து வேகவதி நதிக்கரையவிரும்பி அதன் அழகைக்கண்டு இவ்விடத்தில் மிக்க ஆசை கொண்டு நித்தியவாசம் செய்யும் எண்ணத்தோடு வைகுண்டத்தில் உள்ள பெருமதிப்பையும் விடுத்து ஸ்ரீ யோகா நரசிம்மராக வழிபடக்காட்சி தருகின்றார்.வேகவதி நதியின் மணல் திட்டில் திருவிளையாடல் புரிகின்றார். யோகா நரசிம்மா அடியார்களுக்கும் மற்றும் எல்லாவகை பிராணிகளுக்கும் உறவினராய் இருக்கிறார். ...