தல வரலாறு
இத்திருக்கோயில் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (கி.பி. 1135) கட்டப்பட்டதாகும். இறைவன் பரசுராமேசுவரமுடையார் எனக் குறிப்பிடப்படுகிறார். சோழ அரசனின் மனைவி புவனமுழுதுடையாளும் இக்கோயிலின் வழிபாட்டிற்காக நிலம் தானம் அளித்த செய்தி அறிய முடிகிறது. எனவே இக்கோயில் சுமார் 800 ஆண்டுகள் பழமை உடையதாக விளங்குகிறது. கருவறைக்கு முன் உள்ள மண்டபத் தூண்களில் அழகிய புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயிலில் காணப்படும் பரிவார ஆலய சண்டிகேசுவரர் சிற்பத் திருமேனி மிகவும் கலையழகு மிக்கதாக காணப்படுகிறது கோயிலின் முன்பு நந்தி மண்டபம், பலிபீடம் உள்ளது.