தல வரலாறு

1900ம் வருடங்களுக்கு முன் இத்திருக்கோயில் அருள்மிகு மகா கணபதியின் பக்தர்களான தம்பதியர்களால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும், இத்திருக்கோயில் சுமார் 1500 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் பிரதான சன்னதியாக அருள்மிகு செல்வ விநாயகர் அமைந்துள்ளார். அருள்மிகு வள்ளி, தேவயானி சமேத சுப்ரமணியசுவாமி, அருள்மிகு துர்கை, அருள்மிகு பால ஆஞ்சநேயா, அருள்மிகு நாக லிங்கேஸ்வரர், அருள்மிகு நவக்கிரகங்கள் மற்றும் ஸ்ரீ இராமலிங்க சுவாமி ஆகிய பிற சன்னதிகள் உள்ளன. இத்திருக்கோயில் ஒருகால பூஜை சிவாகமம் முறையில் நடைபெறுகிறது. இத்திருக்கோயிலில் தினசரி 1 கால பூஜை வழிபாடு சிவாகமத்தின் படி நடைபெற்று வருகிறது மண்டல ஸ்தபதி மற்றும் தொல்லியல்துறை வல்லுநரின் கருத்துப்படி இத்திருக்கோயில் சுமார் 100 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது.