தல வரலாறு

இத்திருக்கோயில் வாணதிரையன்பட்டினம் பகுதியில் அமைந்துள்ளது, கோயிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் துவக்கப்பள்ளிக்கூடம் உள்ளது. இத்திருக்கோயில் சைவ ஆகம விதிக்குட்பட்டது. சென்னீஸ்வரர் கோயில் கிழக்கு நோக்கிய அமைந்துள்ளது, இறைவன் வட்ட வடிவமான ஆவுடையார் மீது அமைந்துள்ள இலிங்கம் சென்னீஸ்வரர் ஆவார். ஆவுடையார் மீது அமைந்துள்ள இலிங்கத்தின் ருத்ரபாதம் உருளை வடிவில் செங்குத்தாக உயர்ந்து விளங்குகிறது.இதன் முகத்தில் பிரம்ம சூத்திரக் கோடுகள் பொலிவாக விளங்குகிறது. இறைவி பெரியநாயகி அம்மனின் திருவுருவம் உயர்ந்த பீடத்தின் மீது உள்ள இருக்கையில் நான்கு கைகளுடன் நேராக நின்ற கோலத்தில் சமபாத ஸ்தானகத்தில் காட்சியளிக்கிறது.