தல வரலாறு
இது விக்கிரமங்கலத்தை அடுத்த குணமங்கலம் என்னும் ஊரின் ஈசான் மூலையில் அமைந்துள்ளது.இங்கு பாண்டிய மன்னர் சோழ நாட்டின் மீது போா் தொடுக்க வந்த போது தங்கி போரில் வென்றதன் காரணத்தால் இவ்வூரில் மதுரையின் அடையாளமான மீனாட்சி சுந்தரேஸ்வரா் சிவாலயத்தை கட்டினர் என்பது செவி வழி செய்தி ஆகும்.இத்திருக்கோயிலின் மண்டபத்து கூரையில் மீன் சின்னம் பொாிக்கப்பட்டுள்ளது இதை நிரூபிக்கும் வகையில் உள்ளது. இத்திருக்கோயிலின் முழுப்பெயா் மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரா் ஆகும்.