Screen Reader Access     A-AA+
அருள்மிகு சொர்ண விநாயகர் தான்தோன்றியம்மன் திருக்கோயில், சேப்பாக்கம், சென்னை - 600005, சென்னை .
Arulmigu Sorna Vinayagar Thanthondri Amman Temple, Cheppauk, Chennai - 600005, Chennai District [TM000292]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் செட்டியார் சமூகத்தினரால் கட்டப்பட்டது. இங்குள்ள மூலவர் அம்மன் தானாக தோன்றியதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர் அதனாலேயே தான்தோன்றியம்மன் என்று வழங்கலாயிற்று. இத்திருக்கோயில் சுமார் 2 கிரவுண்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் வந்து அம்மனை வணங்கினால் திருமணத்தடை நீங்குவதாகவும், குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. இத்திருக்கோயிலின் பிரதான சன்னதியாக அருள்மிகு சொர்ண விநாயகர் மற்றும் அருள்மிகு தான்தோன்றியம்மன் விளங்குகின்றது. அருள்மிகு சுப்ரமணியர் வள்ளி தேவயானை, அருள்மிகு சுந்தரேஸ்வரர், அருள்மிகு மீனாட்சியம்மன், அருள்மிகு நடராஜர், அருள்மிகு மகாவிஷ்ணு, அருள்மிகு துர்கை, அருள்மிகு ஆஞ்சநேயர், அருள்மிகு காயத்ரி அம்மன், அருள்மிகு கன்னியாகுமரி அம்மன், அருள்மிகு ஐயப்பன் ஆகிய பிற சன்னதிகள் உள்ளன.