Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுந்தர மூர்த்தி விநாயகர் திருக்கோயில், மேற்படி கோயில் தெரு, சென்னை - 600005, சென்னை .
Arulmigu Sundara Moorthy Vinayagar Temple, Triplicane, Chennai - 600005, Chennai District [TM000294]
×
Temple History

தல வரலாறு

தருமமிகு சென்னையில் கயிலைக்கு ஒப்பான மயிலையின் வடபுறம் பிருந்தாவரண்ய ஷேத்திரம் எனப்படும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திக்கோயிலின் மேற்குப்புரம் சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் தெருவில் இத்திருக்கோயில் வடக்கு பக்கமாக எழுந்தருளியுள்ளது.முன்பு ஒரு சமயம் அகத்திய மாமுனிவர் தீர்த்த பாலீஸ்வரரை தரிசிக்க வரும்பொழுது விநாயகரை ப்ரதிஷ்டை செய்ய விரும்பினார். அப்பொழுது சித்தி புத்தியுடன் சுந்தரமூர்த்தி விநாயகரை வடிவமைத்து வடக்கு முகமாக ஆலயம் எழுப்பி திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா நடத்தி வழிபட்டு சென்றார். இங்கு விநாயகர் வடக்கு முகமாக இருப்பதன் காரணம் சூத்திர ரகஸ்யம் என்னும் நுலில் சித்தி புத்தியோடு வடிவமைத்து இருப்பதால் வடக்கு முகமாக ப்ரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது மரபு. அதோடு மட்டுமல்லாமல்...