தல வரலாறு
இத் திருக்கோயில் திரு அல்லிக் கேணி என்று புகழப்படும் திருவல்லிக்கேணியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள துலுக்காணத்தனம்மன் அனைத்து மதத்தினருக்கும் காக்கும் தெய்வமாக அருள்பாலித்து வருகிறார், இத்திருக்கோயிலுள்ள அம்மன் இச்சாசக்தியாக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் பாலிககிறார். இப்பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் குழந்தை வரம் வேண்டி அம்மனை வழிபட்டு பலனடைந்ததால் தங்கள் குழந்தைகளுக்கு துலுக்காணம் என்று பெயர் சூட்டி வருவது வழக்கமாகும்.