தல வரலாறு
சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு பர்வதராஜகுல வம்சத்தினர் கடலில் மீன் பிடிக்க சென்ற போது ஒரு நாள் அவர்களின் வலையில் சேர்ந்த விநாயகர் கற்சிலை கரையில் கொண்டு வந்து போது மக்கள் சிவனின் சக்தியாலேயே விநாயகர் கற்சிலை உங்களுக்கு கிடைக்கப்பெற்றதாக எண்ணி மனம் மகிழ்ந்தனர். கிராமத்தாரின் விருப்பத்தின்பேரில் அந்த விநாயகர் சிலையை அங்கிருந்த திரு அருவியின் கரையில் பிரதிஷ்டை செய்து வைத்தனர். சில நாட்களில் விநாயகர் சிலையினை சுற்றி செங்கழுநீர் பூக்கள் தோன்றி விநாயகர் மீது பரவியதால் செங்கழுநீர் விநாயகர் பெயர்ப்பெற்றது.