Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஸ்ரீகாளத்தீஸ்வரர் திருக்கோயில், காட்டாங்கொளத்தூர், காட்டாங்கொளத்தூர் - 603203, செங்கல்பட்டு .
Arulmigu Sri Kaalathiswarar Temple, Kattankolathur - 603203, Chengalpattu District [TM003020]
×
Temple History

தல வரலாறு

காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கூடுவாஞ்சேரி - பொத்தேரிக்கு அடுத்துள்ளது காட்டாங்குளத்தூர். இங்குள்ள ரயில் அல்லது பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் போதும். நடந்து செல்லும் தொலைவிலேயே அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் ஆலயம். இங்கு, சனிக்கிழமைதோறும் நிகழும் சர்ப்பதோஷ நிவர்த்தி பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டால் சர்ப்பதோஷங்கள் நீங்கும். அதேபோல் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜை வைபவத்தைத் தரிசிக்க, குழந்தை வரம் வாய்க்கும் என்பது நம்பிக்கை. கலைநயம் மிளிரும் பதினாறு கால் மண்டபம் இந்த ஆலயத்தில் உள்ள பதினாறு கால் மண்டபத்தின் ஒவ்வொரு தூணிலும் பல்லவர்களுக்கே உரித்தான அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நரசிம்மர், ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், தில்லை காளி, காஞ்சி காமாட்சி, கருடன் மீது அமர்ந்திருக்கும் பெருமாள் ஆகிய தூண் சிற்பங்களை மிக...