Screen Reader Access     A-AA+
அருள்மிகு நிமிஷாம்பாள் திருக்கோயில், பூங்கா நகர், சௌகார்பேட்டை - 600079, சென்னை .
Arulmigu Nimishambal Temple, Park Town, Chennai - 600079, Chennai District [TM000303]
×
Temple History

தல வரலாறு

ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மட்டும் அதிகளவில் நிமிஷாம்பாள் அம்மன் வழிபாடு நடைபெற்று வருகிறது. சென்னையில் இங்கு அருள்மிகு நிமிஷாம்பாள் அம்மனுக்கு கோயில் அமையப்பெற்றது தனிச்சிறப்பாகும். சுமார் இருநாறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த பிற மாநிலத்தவர்களின் குல தெய்வமான அருள்மிகு நிமிஷாம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்து, நாளடைவில் பொதுமக்கள் மற்றும் கிராமத்தார்கள் ஈடுபாட்டினால் இத்திருக்கோயில் அழகிய வேலைப்பாடுகளுடன் முகப்பு மண்டபத்துடன் கட்டி முடிக்கப்பட்டது.