தல வரலாறு
தோகைமலை குறிஞ்சி மாநகரை ஆண்ட மன்னன் திரவியன் மனைவி தமயந்தி இவர்களுக்கு நீண்ட நாட்களாக புத்திரபாக்கியம் இல்லாமல் இருந்தனர். மலையும் மலைசார்ந்த இடமும் கொண்ட குறிஞ்சி மாநகரின் மலைமேல் குடிகொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ முருகன் அவர்கள் கனவில் தோன்றி எனக்கு மலைமேல் ஆலயம் அமைத்து ஷஷ்டி விரதம் இருந்து வழிபட்டால் வாரிசு தருவதாக அசரிரி மூலம் கனவில் கணடார்கள். அதன்படி மன்னன் ஆலயம் அமைத்து வழிபாடு நடத்தியதால் வாரிசு உண்டானது. அதன்படி உரிய வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும் என்பது வரலாற்று உண்மை.