Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் - 625005, மதுரை .
Arulmigu Subramaniyaswamy Temple, Thirupparankundram - 625005, Madurai District [TM031985]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சங்கம் வளர்த்த மதுரையில் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில், அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோயிலாகும். இத்திருத்தலத்தின் பெருமையைப் பற்றிச் சங்க கால நுால்களான பரிபாடல், திருமுருகாற்றுப்படை, அகநானுறு, கலித்தொகை மற்றும் மதுரைக் காஞ்சி ஆகிய இலக்கியங்களில் பாடப் பெற்றுள்ளது. மேலும் சைவ சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியேராலும் பாடப்பெற்றுள்ளது. முற்காலப்பாண்டியமன்னர்கள் காலங்களில் குடைவரைக்கோயிலாகத் தோற்றம் பெற்ற இத்திருக்கோயில், பிற்காலப் பாண்டியமன்னர்கள் காலங்களில் மேலும் பொலிவுபெற்று, நாயக்கர் காலத்தில் அழகிய மண்டபங்களையுடைய கோபுரத்துடன் ஏற்றம் பெற்றுத் திகழ்கிறது. தென்புறத்திலுள்ள குடைவரைக் கோயிலுக்கு அருகில் சமணர்களின் கற்படுக்கை அமைந்துள்ளது. பாண்டியர்கள் முதல், இடை, கடை என மூன்று தமிழ்ச்சங்க காலங்களிலும் ஆட்சி புரிந்துள்ளனர். சடையவர்மன் என்னும் பட்டம்...

தல பெருமை

இத்திருத்தலத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆறுபடை வீடுகளில் முதற்படைவீடாகப் போற்றப்படுகிறது. பாண்டியநாட்டு 14 திருத்தலங்களில் ஒன்றாகத் திகழும் இத்திருத்தலம் ஒரு குடவரை கோவிலாகும். இத்திருத்தலத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சத்தியகிரீஸ்வரர் , ஸ்ரீ துர்க்கை அம்மன் , ஸ்ரீ பவளகனிவாய் பெருமாள், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆகிய ஐந்து தெய்வங்களும் ஒருங்கே அமைந்து அருள்பாலிக்கின்றனர். பொருள் பெற்ற ஒருவன் பொருள் இல்லாத வறியவனைக் கண்டு இன்னின்ன பெருமைகளை உடைய இன்னாரிடத்திலே சென்றால், வேண்டும் பொருள் அனைத்தும் பெறலாம் என்று ஆற்றுப்படுத்துவதை (வழிப்படுத்துவதை) ஆற்றுப்படை என்பர். பொருளைப் பெறுவதைப் போல் அருளைப் பெறவும் நம் முன்னோர்கள் ஆற்றுப்படுத்தினர். நக்கீரர் தாமருளிய திருமுருகாற்றுப்படையில் முருகன் உறையும் இடங்களாக ஆறு இடங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் திருப்பரங்குன்றம் முதன்மை...