அருள்மிகு செட்டிகுருநாதசுவாமி திருக்கோவில், மதுரை - 625001, மதுரை .
Arulmigu Chettigurunathasamy Temple, Madurai - 625001, Madurai District [TM031997]
×
Temple History
தல பெருமை
மதுரை சொக்கலிங்கப் பெருமான் குருநாநாதனக் காட்சியளித்த திருத்தலம் தெட்சிணாமூர்த்தி தோன்றி பதி பசு பாச விளக்கம் காட்டி சின் முத்திரை மூலம் ஆன்மாவுக்கும் ஆண்டவனுக்கும் உள்ள தொடர்பை விளக்கிய போதும் சித்த மூர்த்தியாக வந்து மதுரை திருநகரை வழிகாட்டிய இறைவன் குருநாதனாகவே காட்சியளித்திருக்கிறான். மாணிக்கவாசகருக்குத் திருப்பெருந்துறை என்ற ஆவுடையார் கோயிலில் இறைவன் குருநாதனாகவே காட்சி தந்து உபதேசித்தான். குருவாகிக் குவலயம் தன்னில் திருவ வைத்து சிவபெருமான் காட்டய அதே குருநாதன், குதிரை வீரனாக மாறி, பாண்டய நாட்டல் மதுரை திருவீதிகளில் திருவுலா வந்தான். சோமசுந்தரக் கடவுள் மதுரையில் பாண்டய மகராஜாவாகவும் இருந்தான் குருநாதனாகவும் இருந்தான். இதனால் பெருமானே மதுரை மக்கள் குருநாதசாமி என்றழைத்துக் கோயில்கட்ட வழிபட்டார்கள். இப்பட அமைக்கப்பெற்ற திருக்கோயில்கள்...மதுரை சொக்கலிங்கப் பெருமான் குருநாநாதனக் காட்சியளித்த திருத்தலம் தெட்சிணாமூர்த்தி தோன்றி பதி பசு பாச விளக்கம் காட்டி சின் முத்திரை மூலம் ஆன்மாவுக்கும் ஆண்டவனுக்கும் உள்ள தொடர்பை விளக்கிய போதும் சித்த மூர்த்தியாக வந்து மதுரை திருநகரை வழிகாட்டிய இறைவன் குருநாதனாகவே காட்சியளித்திருக்கிறான். மாணிக்கவாசகருக்குத் திருப்பெருந்துறை என்ற ஆவுடையார் கோயிலில் இறைவன் குருநாதனாகவே காட்சி தந்து உபதேசித்தான். குருவாகிக் குவலயம் தன்னில் திருவ வைத்து சிவபெருமான் காட்டய அதே குருநாதன், குதிரை வீரனாக மாறி, பாண்டய நாட்டல் மதுரை திருவீதிகளில் திருவுலா வந்தான். சோமசுந்தரக் கடவுள் மதுரையில் பாண்டய மகராஜாவாகவும் இருந்தான் குருநாதனாகவும் இருந்தான். இதனால் பெருமானே மதுரை மக்கள் குருநாதசாமி என்றழைத்துக் கோயில்கட்ட வழிபட்டார்கள். இப்பட அமைக்கப்பெற்ற திருக்கோயில்கள் குருநாதசாமி கோயில் என்ற பெயரில் மதுரையில் பல பகுதிகளிலும் உள்ளன. இவற்றுள் ஒன்றுதான் செட்ட குருநாதசாமி திருக்கோயில் ஆகும்.