Screen Reader Access     A-AA+
அருள்மிகு மலையாண்டி கருப்பணசாமி திருக்கோவில், வலையன்குளம் - 625022, மதுரை .
Arulmigu Malaiyandi Karuppanaswamy Temple, Valayankulam - 625022, Madurai District [TM032058]
×
Temple History

தல வரலாறு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், வலையங்குளம் கிராமத்தில் அருப்புக்கோட்டை மற்றும் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இத்திருக்கோயிலானது அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 100ஆண்டுகளுக்குட்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் உள்ள கருப்பசாமி மற்றும் அய்யனார் மேற்கு திசையை நோக்கி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்கள். இத்திருக்கோயில் மதுரையில் அமையப் பெற்றுள்ள புகழ் பெற்ற திருக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இத்திருக்கோயிலின் தெய்வத்தை சாலையில் பயணம் செய்யும் பக்தர்கள் அனைவரும் பக்தியுடன் வணங்குகின்றனர். இத்திக்கோயிலுக்கு சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக உள்ளது. பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றி வரும் சக்தி வாய்ந்த தெய்வமாக அருள்மிகு மலையாண்டி கருப்பசாமி உள்ளதால் நேர்த்திக்கடன்களாக கிடா வெட்டுதல் மற்றும் பித்தளை மணிகளை காணிக்கையாக சமர்ப்பித்து வருகின்றனர். இத்திருக்கோயிலில் அமைந்துள்ள அய்யனார் குதிரையானது கேரளாவில்...