Screen Reader Access     A-AA+
அருள்மிகு மேலப்பரங்கிரி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், பேரையூர் - 625703, மதுரை .
Arulmigu Melaparangiri Subramaniyaswamy And Venkatesaperumal Temple, Peraiyur - 625703, Madurai District [TM032100]
×
Temple History

தல வரலாறு

முற்காலத்தில் பேரையூரை திரு.தும்பச்சி நாயக்கா் அவா்கள் ஆண்டு வந்தாா். சிறந்த முருக பக்தராக விளங்கிய அவா் ஒவ்வொரு காா்த்திகை தோறும் திருப்பரங்குன்றம் சென்று முருகக்கடவுளை வழிபட்டு வருவதை வழக்கமாக கொண்டு இருந்தாா். ஒரு சமயத்தில் காா்த்திகை அன்று திருப்பரங்குன்றம் செல்லும்போது ஆற்று வெள்ளம் குறுக்கிட்டது. ஆகவே மேற்கொண்டு செல்ல முடியவில்லை ஆற்று வெள்ளம் மறுநாள் தான் அடங்கியது. காா்த்திகை தாிசனம் செய்ய முடியவில்லையே என்ற அளவில்லாத மனக்குறையுடன் தும்பச்சி நாயக்கா் அவா்கள் பேரையூர் திரும்பினாா். அன்று அவரது கனவில் திருமுருகன் தோன்றி இனி சிரமப்பட்டு திருப்பரங்குன்றம் வரவேண்டாம் உனது இடத்திலேயே நான் காட்சி தருகின்றேன் என்று கூறி மொட்டமலை ஓரம் ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் வேலாக காட்சி...