Screen Reader Access     A-AA+
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் கோயில், ஆண்டிபட்டி - 625512, தேனி .
Arulmigu Meenakshi Sundareswarar Temple, Andipatti - 625512, Theni District [TM032108]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் இருக்கும் இடம், முன்னொரு காலத்தில், பாண்டிய மன்னர் ஒருவரால் ஆளப்பட்டு வந்தது. நாக தோஷம் காரணமாக பார்வையை இழந்த மன்னன், சிவபெருமானை வழிபட்டான். தனக்கு கண் பார்வையை மீட்டு தரும்படி சிவ பெருமானை வணங்கி, இந்த பகுதியில் 108 சிவாலயங்கள் எழுப்புவதாக வேண்டிக் கொண்டான். இறைவன் சிவபெருமான் கண் பார்வை குறைபாடு நீங்க அருள் செய்தார். அவ்வாறு எழுப்பப்பட்ட 108 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.