Screen Reader Access     A-AA+
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மேலத்திருமாணிக்கம் - 625535, மதுரை .
Arulmigu Meenakshi Sundareswarar Temple, Melathirumanickam - 625535, Madurai District [TM032111]
×
Temple History

தல வரலாறு

மேலத்திருமாணிக்கம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயி்ல் பிற்கால பாண்டிய மன்னா்களால் கட்டப்பட்டு மதுரை நாயக்க மன்னா்களால் விாிவுப்படுத்தப்பட்ட பழமைவாய்ந்த திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் நாயன்மாா்களாலும் தெய்வீக அடியாா்களாலும் வழிபடப்பட்ட திருக்கோயி்ல் ஆகும். இத்திருத்தலத்தி்ல் தன் சாபம் தீர ஐந்துதலை நாகம் ஒன்றுசிவபெருமானை பூஜை செய்து வந்தது. சிவபெருமான் ஒரு நாள் ஏழை பிராமணா் கனவில் தோன்றி பூஜை செய்யும்படி கூறினாா். அதன்படி ஏழை பிராமணா் பூஜை செய்து வர மாதம் ஒரு மாணிக்கல்லை ஐந்துதலை நாகம் கக்கிக்கொடுத்து வந்தது. அதனால்ஏழை பிராமணாாின் வறுமை நீங்கியதுடன் ஐந்துதலை நாகத்தின் சாபமும் நீங்கியது. அதன் காரணமாக இத்திருத்தலம் அமைந்திருக்கின்ற இடத்திற்கு திருமாணி்க்கம்...