தல வரலாறு
இத்திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்துர் வட்டம் அக்கரைப்பட்டி கிராமத்தில் கன்னிவாடி மலைப்பகுதியில் சுமார் 1000 அடி உயரத்தில் இயற்கையாக ஏற்பட்ட மலைக்குகையின் அடியில் அமைந்துள்ளது.இத்திருக்கோயிலில் காளியம்மன் முத்தாலம்மன் மற்றம் சடையாண்டிசுவாமி வீற்றிருந்த அருள்பாலிக்கின்றனர்.இத்திருக்கோயிலில் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பாக இருக்கும். மாதாந்திர அமாவாசை நாட்களிலும் வாராந்திர வெள்ளி சனி நாட்களிலும் அதிக அளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிகின்றனர்
தல பெருமை
அருள்மிகு காளியம்மன் முத்தாலம்மன் சடையாண்டி திருக்கோவில் அக்கரைப்பட்டி . இத்திருத்தலம் மலையின் மீது அமைந்துள்ளது . இங்கு சிவன் சன்னதியுள்ளது. சித்தர்கள் சன்னதியும் அமைந்துள்ளது. காவல் தெய்வங்கள் சடையாண்டி . கருப்பசாமி . சன்னதிகள் அமைந்துள்ளது. இங்கு திருவிழா சமயங்களில் பக்தர்கள் அதிகஅளவில் வருகைபுரிகின்றனர். இம் மலையில் இயற்கையான காற்றும் அமைதியான சூழலும் மனதுக்கு அமைதியை தருகிறது.