தல பெருமை
இத்திருத்தலத்தில் உள்ள ஸ்ரீபகவதியம்மன் சற்றேறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டம் ஏமூர் என்ற ஊரில் உள்ள பகவதியம்மன் திருக்கோயில் பிடிமண் கொண்டுவரப்பட்டு அமைக்கப்பட்ட சக்தி மிக்க தாய்க்கடவுளாகும். ஆண்டுதோறும் வைகாசிப் பெருந் திருவிழாவில் இசைப் பாடலால் இதன் தல வரலாறு தொன்று தொட்டு குறிப்பிட்ட பக்தர்களால் பரம்பரையாக பாடப்பெற்று வருகிறது கிராம மக்களின் காவல் தெய்வமாகும். வைகாசித் திருவிழா கரகம் பாலிக்கப்பட்டு 3 நாட்கள் திருவிழா நிகழ்த்தப்பெறும் அம்மன் கரகம் அலங்கரிக்கப் பெற்று திருவீதி உலா நடைபெறும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பூஜையும் விசேச காலங்களில் விசேச பூஜையும் நடைபெறுகிறது.