அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், வேடசந்தூர் - 624807, திண்டுக்கல் .
Arulmigu Mariamman Temple, Vedasandur - 624807, Dindigul District [TM032200]
×
Temple History
தல வரலாறு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் வேடசந்தூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வேடசந்தூர் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. மேற்படி திருக்கோயில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 12 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சாற்றப்படுகிறது .
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருந்திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மேற்படி திருவிழாவில் ஒரு வாரம் முன்பு சுவாமி சாட்டுதல் நடைபெற்று திருவிழா ஆரம்பம் அன்று கம்பம் அலங்காரம் செய்து திருவிழா ஆரம்பித்து அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தும் அக்னி சட்டி எடுத்து நகர்வலம் வந்து கோயிலில் வைத்து வழிபாடு...திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் வேடசந்தூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வேடசந்தூர் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. மேற்படி திருக்கோயில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 12 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சாற்றப்படுகிறது .
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருந்திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மேற்படி திருவிழாவில் ஒரு வாரம் முன்பு சுவாமி சாட்டுதல் நடைபெற்று திருவிழா ஆரம்பம் அன்று கம்பம் அலங்காரம் செய்து திருவிழா ஆரம்பித்து அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தும் அக்னி சட்டி எடுத்து நகர்வலம் வந்து கோயிலில் வைத்து வழிபாடு செய்வார்கள். மேலும் பூக்குழி இறங்கும் அதி விமரிசையாக நடைபெறும் பூக்குழி இறங்குதல், வேண்டுதல் காப்புகட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள். கோவிலில் சுவாமிக்கு பொங்கல் படைத்து வழிபாடு செய்வார்கள். மூன்றாம் நாள் பொதுமக்கள் கம்பம் எடுத்து மஞ்சள் நீராடி ஆற்றில் விடும் நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பாக நடைபெற்று திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறும் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு திருமஞ்சனம் அலங்காரம் நடைபெறும் மேற்படி மாரியம்மன் திருக்கோயிலுக்கு முக்கிய வருமானமாக கட்டிட கடைகள் வாடகை மற்றும் உண்டியல் வருமானம் ஆகும். இத்திருக்கோயிலில் அரசு அறிவித்துள்ள அன்னதான திட்டம் மூலம் தினமும் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.