அருள்மிகு நடராஜர் திருக்கோயில், நிலக்கோட்டை - 624208, திண்டுக்கல் .
Arulmigu Nadarajar Temple, Nilakottai - 624208, Dindigul District [TM032261]
×
Temple History
தல வரலாறு
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நகர் மற்றும் வட்டம் அருள்மிகு நடராசர் திருக்கோயில் மதுரையிலிருந்து பெரியகுளம் செல்லும் மெயின் ரோட்டில் நிலக்கோட்டையின் முக்கியமான இடமான நான்கு ரோடு என்னுமிடத்தில் மதுரையிலிருந்து மேற்காக 48 கிலோமீட்டர் தொலைவிலும் திண்டுகளில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் ஊரின் முக்கிய இடத்திலும் அமைந்துள்ளது.
இத்திருக்கோயில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நிலக்கோட்டையில் வசித்து வந்த திரு. வைரவநாதபிள்ளை என்பவர் அருள்மிகு நடராசரை தனது குலா தெய்வமாக இந்த இடத்தில் வைத்து பூஜித்து வந்திருக்கிறார். சைவ வேளாளர் குலத்தை சேர்ந்தவர். பின்பு அவர் பகவான் நடராஜருக்கு இந்த...திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நகர் மற்றும் வட்டம் அருள்மிகு நடராசர் திருக்கோயில் மதுரையிலிருந்து பெரியகுளம் செல்லும் மெயின் ரோட்டில் நிலக்கோட்டையின் முக்கியமான இடமான நான்கு ரோடு என்னுமிடத்தில் மதுரையிலிருந்து மேற்காக 48 கிலோமீட்டர் தொலைவிலும் திண்டுகளில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் ஊரின் முக்கிய இடத்திலும் அமைந்துள்ளது.
இத்திருக்கோயில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நிலக்கோட்டையில் வசித்து வந்த திரு. வைரவநாதபிள்ளை என்பவர் அருள்மிகு நடராசரை தனது குலா தெய்வமாக இந்த இடத்தில் வைத்து பூஜித்து வந்திருக்கிறார். சைவ வேளாளர் குலத்தை சேர்ந்தவர். பின்பு அவர் பகவான் நடராஜருக்கு இந்த இடத்தில் ஒரு ஆலயம் எழுப்பி திருப்பணி செய்து முடித்து கும்பாபிஷேகம் செய்து 1909ல் இந்த கோயிலை இந்து அறநிலைய வாரியத்திற்கு தானமாக எழுதி கொடுத்துள்ளார்.
அவருக்குப்பின் அவரது மகன் முத்துகாமாட்சி பிள்ளை என்பவர் அந்த கோவிலுக்கு அறங்காவலராக இருந்துள்ளார். அவர் இந்த கோயிலை சுற்றி 8 கடைகள் கட்டி வடைகைக்கு விட்டுள்ளார்.
இத்திருக்கோயில் நாளாகி பழுதடைந்து விட்டதால் இத்திருக்கோயிலில் ஒரே ஒரு கற்பகிரஹம் மட்டுமே உள்ளது . மேற்படி கற்பகிரஹம் அருள்மிகு நடராசர் சுவாமிக்கே உரியதான தென் திசை நோக்கி உள்ளது. இத்திருக்கோயிலில் மூலவர் கல் விக்ரஹங்கள் ஏதுமில்லை. ஆனால் விநாயகர், சுப்ரமணியர், ஆகிய சுவாமிகளுக்கு கல் விக்கிரஹம் உள்ளது.
கர்ப்பகிரகத்தின் முன்புறமாக வலப்பக்கத்தில் அருள்மிகு சுப்பிரமணியர் சன்னதியும் இடப்பக்கமாக அருள்மிகு விநாயகர் சன்னதியும் அமைந்துள்ளது. கர்ப்பகிரகத்தின் நேர் எதிரே அமைந்திருக்கும் அருள்மிகு நந்தீஸ்வரருக்கு மாதம் இருமுறை பிரதோஷ சிறப்பு பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.