தல வரலாறு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் வத்தலக்குண்டு நகரில் மதுரை திண்டுக்கல் பிரிவுச் சாலையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது . அம்மன் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளார். ஆலயம் 150 ஆண்டுகளுக்கு முன்பாக எழுப்பபட்டது. திருக்கோயில் 42 அடி நீளத்திலும் 15 அடி அகலத்திலுமான கருவறை மற்றும் முன் மண்டப அமைப்புடன் கூடிய கட்டிடத்தில் உள்ளது . இத்திருக்கோயிலுக்கு உண்டியல் வருமானமே முக்கிய வருமானமாகும்.