அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், ராமராஜபுரம் - 624219, திண்டுக்கல் .
Arulmigu Muthalamman Temple, Ramarajapuram - 624219, Dindigul District [TM032267]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயில் 1908ல் ஊர் பொது மக்களால் கட்டப்பட்டு திரு எஸ். வெங்கட்டநரசிம அய்யர் என்பவர் நிர்வாக அறங்காவலராக இருந்து திருக்கோயிலின் திருவிழா மற்றும் பூஜைகளை நடத்திவந்துள்ளார். இத்திருக்கோயில் நாளாகி பழுதடைந்து விட்டதால் மீண்டும் புதிதாக திருக்கோயிலை பெரிதாக புதிப்பித்து திருப்பணி செய்து முடித்து 1982ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் மூலவர் மற்றும் உற்சவ விக்ரஹங்கள் ஏதுமில்லை. வருடத் திருவிழா ஆண்டு தோறும் வைகாசி கடைசி புதன் கிழமைகளில் நடைபெறுகிறது. வருடத்திருவிழாவின் போது ஒவ்வொரு வருடமும் புதிதாக மண்ணினால் ஆனா முத்தாலம்மனை செய்து, பொன் மற்றும் வெள்ளி நகைகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்து வழிபட்டு திருவிழா முடிந்தவுடன் நகைகளை அகற்றி அம்மன் சிலையை பூஞ்சோலையில் சேர்த்துவருவர்....இத்திருக்கோயில் 1908ல் ஊர் பொது மக்களால் கட்டப்பட்டு திரு எஸ். வெங்கட்டநரசிம அய்யர் என்பவர் நிர்வாக அறங்காவலராக இருந்து திருக்கோயிலின் திருவிழா மற்றும் பூஜைகளை நடத்திவந்துள்ளார். இத்திருக்கோயில் நாளாகி பழுதடைந்து விட்டதால் மீண்டும் புதிதாக திருக்கோயிலை பெரிதாக புதிப்பித்து திருப்பணி செய்து முடித்து 1982ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் மூலவர் மற்றும் உற்சவ விக்ரஹங்கள் ஏதுமில்லை. வருடத் திருவிழா ஆண்டு தோறும் வைகாசி கடைசி புதன் கிழமைகளில் நடைபெறுகிறது. வருடத்திருவிழாவின் போது ஒவ்வொரு வருடமும் புதிதாக மண்ணினால் ஆனா முத்தாலம்மனை செய்து, பொன் மற்றும் வெள்ளி நகைகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்து வழிபட்டு திருவிழா முடிந்தவுடன் நகைகளை அகற்றி அம்மன் சிலையை பூஞ்சோலையில் சேர்த்துவருவர். ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் மற்றும் நாகர் கற்சிலைகள் உள்ளது. இத்திருக்கோயிலில் செவ்வாய் மற்றும் வெள்ளி நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. காளியம்மன், பகவதி அம்மன் ஆலயங்களில் மூலவர் மற்றும் உற்சவவிக்கிரஹங்கள் ஏதுமில்லை வெள்ளி முகப்பு மற்றும் வெள்ளி குடை ஆகியவை மட்டும் உள்ளது. வருடத்திருவிழாவின் பொது அருள்மிகு காளிஅம்மனுக்கும் அருள்மிகு பகவதி அம்மனுக்கும் கரகம் எடுத்து வெள்ளி முகப்பு மற்றும் குடையை கரகத்தில் சாத்துப்படி செய்து புஸ்ப அலங்காரம் செய்து திருவிழா முடிந்ததும் அந்த கரகத்தை முகப்பு மற்றும் குடைகளை அகற்றிவிட்டு அந்த கரகத்தை கிணற்றில் போட்டு விடப்படுகிறது. அதன் உபகோயிலான பகவதி அம்மன் ஆலயத்தில் உள்ள நகைப்பெட்டியில் பின் அருள்மிகு முத்தாலம்மனின் வெள்ளி மற்றும் பொன் நகைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் தமிழ் வருடப்பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஆயுத பூஜை, தீபாவளி, திருக்கார்த்திகை, மார்கழி, திருப்பள்ளி எழுச்சி, தைப்பொங்கல், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய விசேஷங்கள் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.